News
Loading...

மோடி எழுதிய புத்தகம் இன்று வெளியீடு...!!

மோடி எழுதிய புத்தகம் இன்று வெளியீடு...!!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் குருவாக கருதப்படுபவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களுடன் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் இன்று வெளியாகிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் லக்‌ஷ்மன்ராவ் மாதவ்ராவ் இனாம்தார். மராட்டிய மாநிலத்தில் பிறந்த இனாம்தார் 1942-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, அவ்வியக்கத்தின் பல்வேறு முக்கிய உயர்பொறுப்புகளை வகித்தார்.வெள்ளையர் ஆட்சியின்போது, சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்த இவரை பிரதமர் மோடி தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

‘வக்கீல்சாஹெப்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் லக்‌ஷ்மன்ராவ் மாதவ்ராவ் இனாம்தார் காலமான பின்னர், இவரது வாழ்க்கை வரலாறு தொடர்பாக ராஜாபாய் நேனே என்பவர் இந்தி மொழியில் எழுதிய புத்தகம் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. அந்த புத்தகத்தின் குஜராத்தி மொழியாக்கத்தை ராஜாபாய் நேனேவுடன் இணைந்து பிரதமர் மோடி எழுதியுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறும் விழாவில் இந்த குஜராத்தி புத்தகத்தின் முதல்பிரதி வெளியிடப்படுகிறது.

குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி, ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் பையாஜி ஜோஷி உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

English Summary : Book on RSS leader co written by Modi to be released

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...