News
Loading...

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து இன்று முடிவு

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து இன்று முடிவு

ஜெயலலிதா பகல் முழுவதும் இயல்பாக மூச்சுவிடுவதால், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து இன்று டாக்டர்கள் முடிவு செய்ய உள்ளனர்.

தொடர் சிகிச்சை
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அவருக்கு லண்டனை சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, சதீஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து உள்ளனர். மேலும் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

இந்த சிகிச்சைகளால் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், விரைவில் அவர் பூரண உடல் நலம் பெறுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். தவிர அவர் பூரண உடல்நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேகமான முன்னேற்றம்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் நோய் தொற்று குணமடைந்த நிலையில், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர் செயற்கை சுவாசமும் அவ்வப்போது நிறுத்தப்பட்டு இயல்பாக மூச்சு விடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் வேகமான முன்னேற்றத்தை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும், வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாக சுவாசித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். ‘முதல்–அமைச்சருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘தெரபி’ சிகிச்சைகள் முழுமையடைந்து விட்டது. தொற்றுநோய் தாக்குதலில் இருந்து அவர் பூரண குணமடைந்து விட்டார்’, என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி நேற்றுமுன்தினம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

டாக்டர்கள் இன்று முடிவு
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ‘கடந்த 3 நாட்களாக பகல் பொழுதுகளில் செயற்கை சுவாசம் இல்லாமல் இயல்பாகவே சுவாசித்து வருகிறார்’ என்றும், ‘இரவு நேரங்களில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், அவருக்கு செயற்கை சுவாசம் இனி தேவையா? என்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவருக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து இன்று (திங்கட்கிழமை) முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். எனவே அவர் விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்றுடன் சேர்த்து 53–வது நாளாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

English Summary : Breathe normally throughout the day was Jayalalithaa

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...