News
Loading...

ஜெயலலிதா வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

ஜெயலலிதா வெற்றிபெற்றதை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்அமைச்சர் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா என்பவர் ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

‘சுயேட்சை வேட்பாளரான என்னை பிரசாரம் செய்யவும், பிரசாரத்துக்கு வாகனங்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. என்னுடைய பிரசார வாகனத்தை போலீசார் துப்பாக்கி முனையில் பறிமுதல் செய்து, என்னுடைய பிரசாரத்தை தடுத்து விட்டனர். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள சமஉரிமை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தொகுதியில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றதை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.துரை சாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை நவம்பர் 29ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 English Summary : Chennai High court notice for Election Commission about Jayalalithaa

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...