News
Loading...

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்: ஜோதிடம் கூறிய சீன குரங்கு

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்: ஜோதிடம் கூறிய சீன குரங்கு

ஷாங்காய்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. அங்கு நடைபெறும் கருத்து கணிப்பில் வெற்றி பெறுவது யார் என்பதில் முக்கிய வேட்பாளர்களான ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் மிக குறைந்த அளவு வித்தியாசத்தில் உள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என அறிவதில் உலகமே ஆவலாக உள்ளது. இந்த நிலையில் வெற்றி மகுடம் சூடி அதிபராவது யார் என சீன குரங்கு ஜோதிடம் கூறியுள்ளது.

சீனாவில் ஷியாங்கு உயிரியல் சுற்றுலா பூங்காவில் ‘கெதா’ என்ற குரங்கு உள்ளது. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை துல்லியமாக கணித்து ஜோதிடம் கூறியது.

இது போன்று தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று சுற்றுலா பூங்கா ஊழியர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனின் ஆளுயர கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன. பின்னர் அங்கு ‘கெதா’ என்ற ஜோதிட குரங்கு வரவழைக்கப்பட்டது.

பின்னர் அது டொனால்டு டிரம்ப் கட் அவுட்டுக்கு முத்தம் கொடுத்து அடுத்த அதிபர் என தேர்வு செய்தது. இத்தகவலை பூங்கா ஊழியர்கள் வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் ஒன்று வெற்றி பெற போகும் அணியை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.

English Summary : China monkey Astrology Trump as next US president

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...