News
Loading...

திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்

திருட்டு டிவிடியை தொடர்ந்து தமிழ் திரையுலகுக்கு அச்சுறுத்தல் தரும் பேஸ்புக் லைவ்

தமிழ் திரையுலகத்திற்கு திருட்டு டிவிடி என்பது பெரிய தலைவலியாய் இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் பல்வேறு வகையில் போராடி வருகிறது. ஆனால், அதற்கு இன்னமும் விடிவுகாலம் பிறந்தபாடில்லை. திருட்டு டிவிடியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பிரச்சினை தமிழ் திரையுலகிற்கு அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது. 

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தற்போது வீடியோவை லைவ்வாக திரையிடும் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலமாக தமிழ் திரைப்படங்களை சிலர் பேஸ்புக் பக்கங்களில் தற்போது லைவ்வாக வெளியிட்டு வருகின்றனர். இதில், சமீபத்தில் வெளிவந்த ‘கொடி’, ‘காஷ்மோரா’ ஆகிய படங்களும் அடங்கும். 

பேஸ்புக் லைவ் மூலமாக புதிதாக வெளிவந்த படங்கள் திரையிடப்படுவது தமிழ் திரையுலகிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பிட்ட இணையதளங்களிலும், திருட்டு டிவிடிகளிலும் புதிய படங்கள் வெளியாவதை தடுக்கமுடியாத திரையுலகம், இதற்கு என்ன முயற்சி எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

English Summary : Facebook Live threaten to Tamil Cinema Industry

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.