News
Loading...

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு: சென்னையில் வருமான வரித்துறை சோதனை

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு: சென்னையில் வருமான வரித்துறை சோதனை

நாடு முழுவதும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைக்கவும், புதிய நோட்டுக்களாக மாற்றம் செய்துகொள்ளவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். ஏ.டி.எம். மையங்களிலும் ஏராளமானோர் வரிசையில் நின்று பணம் எடுத்து செல்கின்றனர். ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வராததாலும், 100 ரூபாய் கிடைக்காததாலும் பொதுமக்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணத்தை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாகவும், சிலர் பழைய நோட்டுக்களுக்குப் பதிலாக தங்கத்தை மாற்றிக்கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதுதொடர்பாக டெல்லி மற்றும் மும்பையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையிலும் இன்று 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாரிமுனையில் உள்ள நகைக்கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபடும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதேபோல் ஐதராபாத்தில் பாகுபலி பட தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

English Summary : Income Tax raids in Chennai after irregularities complaint in transfer of old notes

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...