News
Loading...

இந்தியா–இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்

இந்தியா–இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்

ராஜ்கோட் : இந்தியா–இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

5 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா– இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.இந்திய மண்ணில் 5 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுவது 1987–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். 

நீண்ட தொடருக்கு ஏற்ப விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை அடுத்தடுத்து கைப்பற்றியதால் இந்திய வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்கள். சொந்த மண்ணில் கடந்த 14 டெஸ்டுகளில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, அந்த பெருமையை இந்த தொடரிலும் நிலைநாட்டுவதில் தான் ஒட்டுமொத்த சவாலும் அடங்கி இருக்கிறது என்றால் மிகையல்ல.

English Summary : India UK Slammed The first Test cricket Start today

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...