News
Loading...

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 8 தங்கம்

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 8 தங்கம்

சிங்கப்பூரில் காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு பிரிவுகளில் மல்யுத்தம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியாவுக்கு 8 தங்கம், 8 வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ப்ரீஸ்டைல் பிரிவில் ஹர்புல், ஜிதேந்தர், சந்தீப், தீபக் மற்றும் அருண் ஆகியோர் தங்கம் வென்றனர். கிரேக்கோ ரோமன் பிரிவில் ரவீந்தர், கிரிஷன், சச்சின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

இதேபோல், ப்ரீஸ்டைல் பிரிவில் விகாஸ், ராகுல் மான், சந்தீப் கத்தே, அருண், கிரிஷன் ஆகியோர் வெள்ளி வென்றனர். கிரேக்கோ ரோமன் பிரிவில் கிரிஷன், ரபிக், சச்சின் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

English Summary : Indian wrestlers win 8 gold 8 silver in Commonwealth Championship

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.