News
Loading...

சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெறுவதில் சிக்கல்?

சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெறுவதில் சிக்கல்?

நடிகைகளின் திருமணம் நடந்து முடிகிறவரை ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பிக் கொண்டேதான் இருக்கும். அதை எல்லாம் கடந்து கல்யாணம் நடந்து முடிவதில்தான் வெற்றியே இருக்கிறது. வருண் மணியன் என்ற தொழில் அதிபருக்கும் நடிகை த்ரிஷாவுக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. கடைசி நேரத்தில் த்ரிஷா வருண்மணியன் திருமணம் நின்றுபோனது.

சமந்தாவின் திருமணமும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிடுமோ என்ற பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது, படத்துறையில். நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உடன் விரைவில் திருமணம் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்படியொரு திடீர் திருப்பம். சில மாதங்களுக்கு முன் தனுஷ் உடன் வட சென்னை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, அதில் நடிக்க மறுத்தார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்ய இருப்பதைத்தான் தனுஷிடம் காரணமாக சொன்னாராம் சமந்தா.

அதே சமந்தா இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று தமிழ்ப் படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் சமந்தா. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சமந்தாதான் கதாநாயகி.

அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் 'இரும்பு திரை' படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ள சமந்தா, லேட்டஸ்ட்டாக ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திலும் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

இவை தவிர இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடிக்கவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். நாக சைதன்யா உடனான திருமணத்துக்கு சில மாதங்களே இருக்கின்றன. இந்த நேரத்தில் வரிசையாக படங்களை சமந்தா கமிட் பண்ணிக் கொண்டே வருகிறார். வருண்மணியன் உடனான திருமணம் நின்று போனபோது த்ரிஷா என்ன செய்தாரோ அதையே இப்போது சமந்தா செய்கிறார். ஆக, சமந்தா - நாக சைதன்யா திருமணம்... திட்டமிட்டபடி நடைபெறுவதில் என்னவோ சிக்கல் என்றே தோன்றுகிறது.

English Summary : Is problem in Samantha - Naga chaithanya marriage

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...