News
Loading...

கமல் - கௌதமி பிரிவுக்கு சீனியர் நடிகை காரணமா?

கமல் - கௌதமி பிரிவுக்கு சீனியர் நடிகை காரணமா?

கமலிடமிருந்து கௌதமி பிரிந்து சென்றதற்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என்றுசொல்லப்பட்டு வருகிறது. இது பற்றி பல ஊடகங்களில் செய்திகள் வந்த பிறகும் கூட ஸ்ருதிஹாசன் தன் தரப்பை சொல்லவில்லை.

தன்னுடைய அப்பா கமலுக்கும், கௌதமிக்கும் இடையில் நடக்கும் பிரச்சனையில் தன்னுடைய பெயர் அடிபட ஆரம்பித்திருப்பதால் ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்திருக்க வேண்டும். மாறாக, யாரோ ஸ்போக்ஸ்பர்சன் சொன்னதாக ஒரு தகவல் வெளியானது. அந்த ஸ்போக்ஸ்பர்சன் யார் என்றே தெரியவில்லை. இதை வைத்தே ஸ்ருதிஹாசன்தான் இத்தனை பிரச்சனைக்கும் மூல காரணம் என்ற பேச்சு திரையுலகில் அடிபடுகிறது.

இது ஒரு பக்கமிருக்க, கமல் - கௌதமி இடையிலான பிளவுக்கு சீனியர் நடிகை ஒருவர்தான் காரணம் என்ற தகவலும் அடிபட ஆரம்பித்திருக்கிறது. சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றபோது கௌதமி டிசைன் செய்த டிரஸ்ஸை ஸ்ருதிஹாசன் அணிய மறுத்ததால், கௌதமிக்கும் ஸ்ருதிக்கும் தகராறு ஏற்பட்டது.

ஸ்ருதிஹாசன் தன்னை அவமானப்படுத்தியதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார் கௌதமி. கௌதமி சென்னைக்கு கிளம்பிய பிறகு, கமலுடைய அறையில் அந்த சீனியர் நடிகை தங்கியதாக கௌதமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்குப் பிடிக்காத வேறு பல சம்பவங்களும் அங்கு நடைபெற்றதாக தன்னுடைய விசுவாசிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகே கமலிடமிருந்து நிரந்தரமாக விலகிவிடும் முடிவை எடுத்தாராம் கௌதமி.

English Summary : Is senior actress #ramyakrishnan behind kamal - gowthami break up 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.