News
Loading...

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில், பைகளுக்கு தடை

சபரிமலையில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பிளாஸ்டிக் பாட்டில், பைகளுக்கு தடை

பரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் துணி பைகள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சபரி மலைக்கும், தற்போதுள்ள சபரிமலைக்கும் பல்வேறு கட்டமைப்பு வேறுபாடுகள் உள்ளன. பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் போன்றவற்றை இங்கேயே விட்டு செல்வதால் சுற்று சூழல் மாசுபட்டு கொண்டே வந்தது. 

கடந்த 2012-ம் ஆண்டு புன்னிய பூங்காவனம் என்ற ஒரு திட்டத்தின் கீழ் இந்த புண்ணிய பூமியை தூய்மைபடுத்தவும், சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இதனை பக்தர்கள் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். 

இதன் ஒருகட்டமாக இந்த ஆண்டு சபரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பாட்டில்கள் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் தங்கும் விடுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் கொடுப்பதற்கு மாற்றாக வேறு முறையில் தண்ணீர் கொடுத்தால் நலமாக இருக்கும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...