News
Loading...

வெடித்து சிதறிய ஃலைப் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வெடித்து சிதறிய ஃலைப் ஸ்மார்ட்போன்: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஜியோ சிம்மை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ரிலையன்ஸ் 4ஜி ஃலைப் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் முதல்வருமான  உமர் அப்துல்லாவின் அரசியல் செயலாளரான தன்வீர் சாதிக் தனது ட்விட்டர் பக்கத்தில் "ரிலையன்ஸ் ஃலைப் ஸ்மார்ட்போன் வெடித்ததில் மயிரிழையில் நானும் எனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தோம்" என புகைப்படங்களைப் பதிவிட்டு தெரிவித்திருந்தார்.

தன்வீரின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தன்வீரைத் தொடர்பு கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது.

English Summary : Man says Reliance LYF phone exploded

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.