News
Loading...

இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை

இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை

காத்மாண்டு: இந்தியா அறிவிக்கை வெளியிடாததால் நேபாளத்தில் புதிய 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

நேபாள நாட்டில் மக்கள் இந்திய பணம் ரூ.25 ஆயிரம் வரை வைத்திருக்க அனுமதி உண்டு. இந்தியாவில் இப்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டுகளுக்கு அங்குள்ள நேபாள ராஷ்டிர வங்கி தடை விதித்துள்ளது. அவை அங்கீகாரமற்றது, கள்ளத்தனமானது என்று வங்கியின் செய்தி தொடர்பாளர் நாராயண் பவுடெல் கூறியுள்ளார்.

இந்தியா அன்னிய செலாவணி மேலாண்மை சட்டப்படி அறிவிக்கை வெளியிட்டால் தான் அவை நேபாளத்தில் சட்டப்பூர்வமானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கும் அங்கு கடந்த ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நேபாளத்துக்கு பயணம் சென்ற பின்னரே அந்த தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English Summary : New Indian notes Rs.500 and Rs.2000 are illegal and banned in Nepal 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...