News
Loading...

இனி பேஸ்புக் மூலம் வேலை தேடலாம்

இனி பேஸ்புக் மூலம் வேலை தேடலாம்

லின்கடின் (LinkedIn) நிறுவனம் வேலைவாய்ப்பு தளங்களை வெளியிட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் வேலைதேடுவோரும், வேலைவேண்டுவோரும் தகவல்களை பெற முடியும். இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு போட்டியாக பேஸ்புக் களம் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் செய்திதொடர்பாளர் கூறுகையில், பல்வேறு சிறு வணிக நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொடர்பாக தகவல்களை தங்கள் பேஸ்புக்கில் வெளியிடுவதை பார்த்துள்ளோம். இது போன்று வேலை தேடுவோர்களின் நலனை அடிப்படையாக் கொண்டு ஃபேஸ்புக் பேஜ் அட்மின்களை உருவாக்கியுள்ளோம். அதில் இனி வேலை வாய்ப்புகளை பற்றி அறிவிக்கலாம். வேலைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். சோதனைக் கட்டத்தில் இந்த ஃபேஸ்புக் பேஜ் அட்மின் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார். எனவே இனி வேலை தேடுவோர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாக பேஸ்புக் செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...