News
Loading...

ரூ.7,000 கோடி நோட்டுகளை மாற்ற முடியாமல் மாவோயிஸ்டுகள் திணறல்

ரூ.7,000 கோடி நோட்டுகளை மாற்ற முடியாமல் மாவோயிஸ்டுகள் திணறல்

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கார் மாநிலத்தில் அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தாக்குதலுக்கு தேவையான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ஏராளமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

பஸ்தர் மண்டலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் மட்டும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் என ரூ.7,000 கோடிக்கு பதுக்கி வைத்திருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து மாவோயிஸ்டு தடுப்பு சிறப்பு போலீஸ் டைரக்டர் ஜெனரல் அவஸ்தி கூறுகையில், ‘‘பஸ்தர் மண்டலத்தில் உள்ள மாவோயிஸ்டுகள் மட்டும் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ரூ.7,000 கோடிக்கு பதுக்கி வைத்து உள்ளனர். அவை செல்லாது என்ற அறிவிப்பு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுகளை மாற்ற மாவோயிஸ்டுகள் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் கிராம மக்கள் மூலம் முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த பகுதிகளில் பண நடமாட்டத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

மத்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மாவோயிஸ்டு இயக்கத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

English Summary : Notes of Rs. 7000 crore Maoists are unable to change

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...