News
Loading...

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது... ஹிலாரியா?... டிரம்ப்பா?

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...ஹிலாரியா?...டிரம்ப்பா?

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஹிலாரி, டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள். 

இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார். இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 81 இடங்களிலும், ட்ரம்ப் 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத அளவில் உள்ளது.
மொத்தம் 50 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

English Summary : Polls closing in Trump vs Clinton duel for the White

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.