News
Loading...

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பும் சமூக வலைதள கிண்டல்களும்

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பும் சமூக வலைதள கிண்டல்களும்

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 2 நாட்களாக செல்போன்களில் இது போன்ற ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் அதிக அளவில் பரவி வருகின்றன. அதில் சிலவற்றை பார்க்கலாம்.

* மோடி வந்தா சேஞ்ச் வரும் சேஞ்ச் வரும்னு சொன்னாங்க.... இப்படி சேஞ்சுக்கே அலையற அளவுக்கு சேஞ்ச் வரும்னு தெரியாம போச்சே.

* வரலாற்றின் மிக முக்கியமான நாள். பணம் அதிகமா இருக்குறவன் சோகமாகவும்..., பணம் குறைவா இருக்கிறவன் சந்தோ‌ஷமாக இருக்கிற நாள்.

* இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர் மோடி.

* ராணுவ மோதல் மூலம் இந்தியாவை வீழ்த்த முடியாத பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள், எல்லைப் பகுதியில் 500, 1000 ரூபாய் கள்ள நோட்டுகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், அதனை முன்கூட்டியே அறிந்து மோடி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

* பொது மக்கள் கவனத்துக்கு... திருடர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு உங்கள் கவனத்தை ஈர்த்து பர்சில் உள்ள 10, 20, 50, 100 ரூபாயை திருடுவார்கள். கவனமாக இருக்கவும்.

* பிளாக் மணி (கருப்பு பணம்) வெளியே வருதோ... இல்லையோ... கணவருக்கு தெரியாம அரிசி டப்பா, லாக்கர்ல, பீரோவுல மனைவி ஒளிச்சி வச்சிருக்கர பிளாக் மணி கன்பார்ம் வெளியில வரும்.

* சார் ஒரு 100 ரூபாய் கடன் கொடுங்க சார்...

* இதப்பாருங்க ரூ.500, 1000 கேளுங்க தர்றேன். 100 ரூபாய் கேக்குத வேலையெல்லாம் வேண்டாம்.

* சாக்கு மூட்டையில ரூபாய கட்டி வச்சவனெல்லாம் ஓரிருநாளில் தீர்ந்துவிடும் சாதாரண பிரச்சினையை கூட நம்ம ஆளுங்கனால பொறுத்துக் கொள்ள முடியாதது வேதனையா இருக்கு.

* 20 சதவீத அயோக்கியர்களுக்காக 80 சதவீத மக்களின் வாழ்க்கையோடு விளையாடி விட்டார் மோடி.

* கோடி கோடியா வச்சிருக்கவன் கம்முன்னு இருக்கான். ரெண்டு... மூணு ரூபா நோட்ட வச்சிருக்கவன் பண்ற அலம்பல் தாங்க முடியலப்பா.

* அறிவித்த மோடி தூங்கிட்டாரு... அப்பாவி மக்கள் என்ன பண்றதுன்னு அலையுறாங்க.

* இல்லாதவனுக்கு ஆச்சர்யத்துல தூக்கம் வராது.... இருக்கிறவனுக்கு அதிர்ச்சியில தூக்கம் வராது.

* இந்தியா புதிய உலகத்தில் இரவு 12 மணிக்கு வல்லரசாக அடியெடுத்து வைக்கிறது. கருப்பு பண முயற்சிக்காக சில சிரமங்களை ஏற்கத் தயார்.

* பணம் இல்லாதவர்கள் புலம்பி பார்த்திருக்கிறேன். பணம் இருக்கிறவங்க புலம்புவதை இப்போதுதான் பார்க்கிறேன்.

* பணம் இல்லாதவன் நிம்மதியாக தூங்குவான். பணம் வைத்திருப்பவன் தூக்கத்தை இழந்து தவிப்பான். எதுவும் நிரந்தமில்லை இந்த உலகில்.

* மோடி.... ன்னா தாடி வைச்சுக்கிட்டு கண்ணாடி போட்டுக்கிட்டு குர்தா போட்டுக்கிட்டு ப்ளைட் ஏறி நாடு நாடா சுத்துறவர்னு நினைச்சிங்களா....? மோடி டா...

* அடுத்து வர ரூபாய் நோட்டுல எக்ஸ்பயரி தேதி போட்டு அடிக்கலாம்.... இது சொன்னா நம்ல அடிக்க வராங்க.

* 500 ரூபாய் நோட்டுக்கே சில்லரையை மாத்த முடியல. இதுல 2000 ரூபாய் நோட்டு வேறயா?

* பல வீடுகளில் சமையல் அறை டப்பாகளில் இருந்து ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே வருவதால் கணவன்மார்கள் அதிர்ச்சி. ஆங்காங்கே சிலர் மயக்கம்.

* மோடி ஜி.... இதே மாதிரி நாளைக்கு ராத்திரியில் இருந்து இந்த பேஸ்புக்கும், வாட்ஸ்-அப்பும் செல்லாதுன்னு அறிவிச்சிடுங்க... எல்லாரும் அவங்க அவங்க பொழப்ப பாப்பாங்க. கொஞ்சம் புண்ணியமா போகும்.

* சுவிஸ் பேங்க்ல இருக்குற பணத்த எடுத்துட்டு வாங்கண்ணு சொன்னா... சுருக்கு பையில இருக்கற பணத்த பிடுங்குறாங்களே.

* கபாலி படத்துக்கு டிக்கெட் வாங்க இரவு முழுக்க வரிசையில் நிற்க முடியும். ஜியோ சிம் வாங்க இரவு பகலா நிற்க முடியும். 500, 1000 ரூபாய் நோட்ட மாற்ற வரிசையில நிற்க முடியாதா? மாற வேண்டியது அரசாங்கம் அல்ல மக்கள்தான்.

* நாடு முழுவதும் தற்போது வரை 5 ஆயிரம் பிச்சைக்காரர்கள் கடத்தல். சில்லரைக்காக கடத்தி இருக்கலாம் என தகவல்.

* பெட்ரோல் அடிக்க முடியலையாம்... பால் வாங்க முடியலையாம்... பொலம்புறாணுங்க... ஒரு நாளைக்கு எல்லோரும் வீட்ல உட்கார்ந்துக்கங்கடா... தேசத்துக்காக இந்த சின்ன கஷ்டத்த கூட பொறுத்துக்க மாட்டீங்க... ஆனா கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வரனும்பீங்க... கள்ள நோட்டை ஒழிக்கனும்பீங்க... பிரதமர் என்ன மந்திரமா... போட முடியும்?

* உலகமே அமெரிக்க தேர்தலை பார்த்துட்டு இருக்கும் போது ஒரே அறிவிப்புல ஒட்டு மொத்த உலகத்தையும் இந்தியாவ பார்க்க வச்சார் பார், மோடிடா.
நல்லவேளை 7:30மணிக்கு 500ரூபாய் நோட்ட ஒரு பாவ் பாஜி கடையில மத்திட்டேன்னு நினைக்கும்போது... கடவுள் இருக்கான் குமாருனு தோனும்.

English Summary : Rs 500 Rs 1000 a notice was invalid social network

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.