News
Loading...

அப்பாவுக்கு பாட்டு பாடிய சிம்பு ...

அப்பாவுக்கு பாட்டு பாடிய சிம்பு ...

சிம்பு தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார். சிம்பு சிறுவயதில் இருக்கும்போது தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் ஒருசில பாடல்களை பாடியுள்ளார். மற்றபடி, சிம்பு நடிக்கும் படங்களுக்குதான் டி.ராஜேந்தர் பாடி வருகிறார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு தனது அப்பா நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டி.ராஜேந்தர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கவண்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மடோனா செபஸ்டியான் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இப்படத்தில் ஏற்கெனவே டி.ராஜேந்தர் ஒரு குத்துப் பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கான படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்நிலையில், சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பாடலும் குத்துப் பாடலாகவே உருவாகியுள்ளதாம். விரைவில், இதையும் படமாக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

English Summary : STR sung for father TR

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.