News
Loading...

சாக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு, போலீஸ் ஆய்வு

சாக்குகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிப்பு, போலீஸ் ஆய்வு

உத்தரபிரதேச மாநிலத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

500, 1000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க் கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வாபஸ் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போடவும், போலி ரூபாயான கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு இந்திய பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் டிசம்பர் 30-ம் தேதி வரையில் மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதிய 500, 2000 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நேற்று பாதி எரிந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பரேலி மாவட்டம் சிபி காஞ் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இதனை சாக்குகளில் கொண்டுவந்து உள்ளனர், பின்னர் அங்கு கொட்டிஉள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதற்கிடையே போலீசார், முதல் ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர். 

எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை சோதிக்க ஆய்வு செய்து வருகிறோம்,” என்று போலீஸ் அதிகாரி ஜோசிந்தர் சிங் கூறிஉள்ளார்.  

அப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றிஉள்ளனர், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து இச்சம்பவம் நிகழ்ந்து உள்ளது, இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

English Summary : Sacks Full Of Burnt 500 And 1000 Rupee Notes In Uttar

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...