News
Loading...

ஒரே வருஷத்துல ரெண்டு மடங்கு! உஷார் மக்களே உஷார்...

ஒரே வருஷத்துல ரெண்டு மடங்கு! உஷார் மக்களே உஷார்...

ந்தவொரு முதலீடும் குறுகிய காலத்தில் அதிக வருமானம் தருவதாகச் சொன்னால், மிகவும் உஷாராக இருப்பது நல்லது. இங்கே முதலுக்கே மோசமாக வாய்ப்பு இருக்கிறது. கடந்த காலத்தில் நடந்த ஈமு கோழிப் பண்ணை, தேக்கு மரத் திட்டம், ரைஸ் புல்லிங், மண்ணுளி பாம்பு விற்பனை என பலவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லாம். சில நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 18%, 22% வருமானம் தருவதாகச் சொல்லும். இது போன்ற நிறுவனங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நிறுவனங்கள், ஏஜென்ட்களுக்கு அதிக கமிஷன் கொடுத்து நிதி திரட்டுகின்றன. உதாரணமாக, ஒரு ஏஜென்ட் ரூ.10,000 திரட்டினால், அவருக்கான கமிஷன் 30%. அதாவது 3,000 ரூபாயை எடுத்துக்கொண்டு மீதி 7,000 ரூபாயை நிறுவனத்திடம் கட்டினால் போதும் என்கின்றன. ஏஜென்ட்களும் அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு அதிகம் பேரை (இதில், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்களும் உண்டு) சேர்த்துவிடுகிறார்கள்.  இந்த நிறுவனங்கள் கூடிய விரையில் கோடிக் கணக்கான ரூபாயைத் திரட்டிக் கொண்டு திடீரென காணாமல் போய்விடுகின்றன. 

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, ஒரு முதலீட்டுக்கு நிலையான வருமானம் தருவதாகச் சொன்னால், 12.5% என்கிற அளவில் இருக்க வேண்டும். வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 8 முதல் 9% இருக்கும்போது, தனியார் நிறுவனங்களின் டெபாசிட்டுகளுக்கு 11 முதல் 12.5% வரை போகலாம். அதற்கு மேல் யாராவது சொன்னால், உஷாராக இருப்பது மிக அவசியம். 

‘நீங்க போட்ட பணம் ஒரே வருடத்தில் இரண்டு மடங்கா ஆகும்’ன்னு யாராவது சொன்னா, நம்பிடாதீங்க மக்களே!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...