News
Loading...

வங்கியில் செலுத்தப்பட்ட கருப்பு பணத்துக்கு 60 சதவீத வரி!...

வங்கியில் செலுத்தப்பட்ட கருப்பு பணத்துக்கு 60 சதவீத வரி!...

புதுடெல்லி: வங்கியில் செலுத்தப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

வங்கியில் செலுத்தப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதி வரை வங்கிகளில் அவரவர் கணக்கில் செலுத்தலாம் என்று கூறியது. இதை பயன்படுத்தி, ஏராளமானோர், கணக்கில் காட்டாமல் வைத்திருந்த கருப்பு பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தினர். இதனால், ரூ.2½ லட்சத்துக்கு மேல் போடப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்யப்போவதாக வருமான வரித்துறை அறிவித்தது. வருமானத்துக்கு பொருந்தாத பணமாக இருந்தால், அதற்கு வருமான வரியுடன் 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்தது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சிலர் பணத்தை தீவைத்து எரித்தனர்.

இதுவரை பணம் இல்லாமல் இருந்த ‘ஜன்தன் யோஜனா‘ கணக்குகளில் மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி போடப்பட்டதும் மத்திய அரசை கவலை கொள்ள வைத்தது. அது, மற்றவர்களின் பணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இவை பற்றியெல்லாம் விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று இரவு அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, ரூ.2½ லட்சத்துக்கு மேல் யார் யார் வங்கி கணக்கில் செலுத்தினார்களோ, அந்த பணம் கணக்கில் காட்டப்படாத பணமாக இருந்தால், அதற்கு சுமார் 60 சதவீத வரி விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

English Summary : Suspicious Deposits Made After Currency Ban May Attract

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...