News
Loading...

பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலை

பாகிஸ்தானில் பஞ்சாயத்து தீர்ப்பின்படி கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், குஜராத் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண்ணின் தந்தை, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக உள்ளூர் பஞ்சாயத்தில் புகார் கூறப்பட்டது. இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில், சிறுமியிடம் தவறாக நடந்தவரின் பெண்ணை, சிறுமியின் தந்தை கற்பழிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த பெண் கற்பழிக்கப்பட்டார். இதில் அவர் கர்ப்பமானார். இதனால் மனமுடைந்த அந்த பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை காப்பாற்றி லாகூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட பெண் ஏற்கனவே திருமணமானவர். 2 ஆண்டுகளுக்குமுன்பு வெளிநாடு சென்ற கணவர், ஊர் திரும்ப உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

English Summary : Woman Raped on Panchayat Orders in Pakistan Commits Suicide

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...