News
Loading...

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சிங்கப்பூரில் தொடங்கியது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் முடிவில் இந்தியா மற்றும் சீனா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய பெண்கள் அணி 2-1 என சீன அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஒரு கட்டத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடிக்க இந்தியா 2-1 என சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில்   பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

English Summary : Women Hockey India beat China 2 1 in Final to win Asian Champions Trophy title

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.