News
Loading...

ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி

ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் பெரும் மனக்கவலையில் இருந்துள்ளார் நடிகர்.

இதனால், திடீரென நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 
இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த அவரது முன்னாள் மனைவி நடிகை நளினி, மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரை உடனிருந்து கவனித்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராமராஜன். இந்தத் தம்பதிக்கு அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2000ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து செய்து கொண்ட ராமராஜனும், நளினியும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...