News
Loading...

கருப்பு பணத்தை காப்பாற்ற கைகோத்த அ.தி.மு.க - தி.மு.க!

கருப்பு பணத்தை காப்பாற்ற கைகோத்த அ.தி.மு.க - தி.மு.க!

நோட்டுக்காக கைகோத்த அ.தி.மு.க - தி.மு.க!

டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சியினர் ஓரணியில் திரண்டனர். 23-ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் எதிரெதிர் துருவமாக இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளின் எம்.பி-க்களும் மோடி அரசுக்கு எதிராகக் கைகோத்து கோஷமிட்டனர். ராகுல் காந்தியின் அருகருகே தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி. நவநீதகிருஷ்ணனும் நின்றுகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். இந்த இரு கட்சிகளும் ‘ரூபாய் நோட்டு செல்லாது’ என்ற அறிவிப்பை வரவேற்றுள்ளன. ஆனால், அதற்காக சாதாரண மக்களைத் துன்புறுத்துவதைக் கண்டித்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கனிமொழியோடு நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருந்தார் நவநீத கிருஷ்ணன்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...