News
Loading...

ATM களை தேட உதவும் 'கூகுள்!'

ATM களை தேட உதவும் 'கூகுள்!'

பணம் எடுக்க மக்கள் அல்லாடி வரும் நிலையில், ஏ.டி.எம்., மையங்களை கண்டறிய, 'கூகுள்' நிறுவனம் உதவுகிறது. 

மத்திய அரசின், கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால், தற்காலிகமாக பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி, மக்கள் படையெடுத்து வருகின்றனர். மையங்கள் செயல்பட தொடங்கிய, ஒரு மணி நேரத்திலேயே, இருப்பு பணம் காலியாகி, முடங்கி விடுகின்றன. 

மக்கள் அவதியை கருத்தில் கொண்டு, இணையதளம் வாயிலாக உதவ, கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. கூகுள் தேடு தளத்தின் முகப்பு பக்கத்தில், இதற்காக, 'Find an ATM near you' என்ற பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. அதை பயன்படுத்தி உள்ளே நுழைந்தால், நீங்கள் இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின், ஏ.டி.எம்., மையங்களை, வரைபடம் வாயிலாக அறியலாம்.

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும், ஸ்மார்ட் போன் வாயிலாகவும், இவ்வசதியை பயன்படுத்த லாம். இதே போல, 'www.cashnocash.com' போன்ற சில தனியார் நிறுவனங்களும், நம் இருப்பிட பின் கோடு எண்ணை பதிவு செய்தால், சுற்றியுள்ள, ஏ.டி.எம்., மையங்களின் விபரம், செயல்படும் நிலையில் உள்ளதா, மக்கள் காத்திருக்கின்றனரா என்ற விபரங்களையும் அளித்து வருவது, மக்களுக்கு பயனளிப்பதாக உள்ளது. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்