News
Loading...

குறைந்துபோன தொழில், விவசாய வளர்ச்சி

குறைந்துபோன தொழில், விவசாய வளர்ச்சி

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், தொழிலும், விவசாயமும் ஒன்றுபோல் வளர்ந்தால்தான், மாநிலத்தில் முன்னேற்றத்தை காணமுடியும். ஏனெனில், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்குவது விவசாயமும், இதன் வளர்ச்சிக்கு வித்திடுவது தொழில்வளர்ச்சியுமாகும். 

தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்தது. அதிலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10-ந் தேதிகளில் தமிழ்நாட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 7 ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளும், 1,200 வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாநாட்டின் முடிவில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 120 கோடி தொழில் முதலீடு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. 

குறைந்துபோன தொழில், விவசாய வளர்ச்சி
அப்போதே நெட்டிசன்கள், #செந்தில் #கவுண்டமணி ஈயம் பூச வரும் படத்தை போட்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்த தொழில் அதிபர்கள் என்று கலாய்த்தனர். அது தற்போது முற்றிலும் உண்மை. தொழில் வளர்ச்சியில் 18வது இடம். விவசாயத்தில் 25 வது இடம். என்று தமிழகம் இருண்ட காலத்திற்கு சென்றுவிட்டது.

ஒவ்வொரு புரிந்துணர்வு திட்டத்திற்கும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த விரைவாக ஆணையிடப்பட்டது. இதையெல்லாம் வைத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில்வளர்ச்சி ஏற்படும் என்று பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மட்டுமல்லாமல், விவசாய வளர்ச்சியும் மிகவும் சரிந்துள்ளது எல்லோருக்கும் கவலை அளிக்கத்தக்க வகையிலிருக்கிறது. 

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில் எளிதில் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலையை குறித்த 340 அம்சங்களை வைத்து உலகவங்கியும், மத்திய அரசாங்கத்தின் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையும், 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் ஆய்வுகள் நடத்தி பட்டியலிட்டது. 

இதில், மொத்தமுள்ள 36 இடங்களில், அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா முதல் இரு இடங்களையும், குஜராத் 3-வது இடத்தையும், சத்தீஸ்கர் 4-வது இடத்தையும், மத்தியபிரதேசம் 5-வது இடத்தையும், அரியானா 6-வது இடத்தையும் பெற்றுள்ளன. முதல் 7 இடங்களில், 5 இடங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 12-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, பரிதாபமாக 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகவங்கி அறிக்கைப்படி, தொழில் தொடங்க உகந்த 17 பெருநகரங்களில், சென்னை 15-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, இமாசலபிரதேசம், டெல்லி மாநிலங்களின் தொழில் சீர்திருத்த நடைமுறைகளில் வேகம்வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு முன்னேற்றத்தை காணவில்லையென்றால், வேளாண் விளைபொருட்கள் விற்பனை மற்றும் கூட்டுறவு சட்டங்களின் பிரிவுகளை அமல்படுத்துவது தொடர்பான வேளாண் வளர்ச்சியிலும் Ôநிதி அயோக்Õ மேற்கொண்ட ஆய்வில் முதல் 10 இடங்களில் தமிழ்நாடு இல்லை. மொத்த மாநிலங்களில் 20-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 

தமிழக அரசு குறிப்பாக தொழில்துறை, வேளாண்துறை, உடனடியாக தொழில்வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும் மிக அதிகமான முன்னுரிமை கொடுத்து, இந்த ஓராண்டில் அந்த இருவளர்ச்சியிலும் சிறப்பான இடத்தைப்பெற்றே தீரவேண்டும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த இருவளர்ச்சிகளும் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு மேற்கொண்ட நிறுவனங்கள் அனைத்தையும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைப்பதை தொழில்துறை முக்கிய சவாலாக கொள்ளவேண்டும். புரிந்துணர்வு செய்த நிறுவனங்கள் தொழில்களை எளிதாக தொடங்குவதற்கு அனைத்து வழிமுறைகளையும், ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டு, அந்ததொழிலை தொடங்கவைப்பதில் தனிமுத்திரை பதிக்கவேண்டும். தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழ்நிலைகளில் எந்தெந்த சூழ்நிலையில் குறைபாடு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதையெல்லாம் நிவர்த்தி செய்துவிட்டால், நிச்சயமாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில்முனைவோர் ஆர்வத்துடன் வருவார்கள் என்பதில் நிச்சயமாக சந்தேகமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...