News
Loading...

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்!

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்!

மறைகல்வி கற்பதற்காக வந்த பள்ளி மாணவியை பாதிரியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், என்.பஞ்சம்பட்டியில் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு உதவிப் பாதிரியாராக பணியாற்றியவர் திருநெல் வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர்.  திண்டுக்கல் ஆயர் இல்லத்தின் நிர்வாகச் செயலராகவும் இருக்கிறார். கிஷோர், பஞ்சம்பட்டியில் பணியாற்றியபோது, மறைகல்வி கற்பதற்காக சர்ச்சுக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார். பின்னர், காதலிப்பாக ஆசை வார்த்தைகள் சொல்லி, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவரிடம் பேசினோம். ‘‘பொதுவாக, மறைகல்விக்கு வர்றவங்கக்கிட்ட குடும்ப கஷ்டங்களைக் கேட்டு, பாதிரியார்கள் ஆறுதல் வார்த்தைகள் சொல்வாங்க. இந்தப் பொண்ணு தன் குடும்ப கஷ்டங்களைச் சொல்லி அழுதிருக்கு. அந்தப் பெண்ணிடம், பாதிரியார் ஆறுதல் சொன்னதோட, அன்பாகப் பேசி, ‘நான் உன்னை காதலிக்கிறேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என சொல்லி அந்தப் பிஞ்சு மனசைக் கெடுத்து, தன்னோட ஆசைக்குப் பயன்படுத்திக்கிட்டார். இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே தெரியவந்துச்சு. உடனே, இந்தப் பெண்ணோட சித்தப்பா, சர்ச்சுக்குப் போய் சத்தம் போட்டுள்ளார். தப்பு செஞ்ச பாதிரியாரைக் காப்பாத்துறதுல மத்த சாமியாருங்க குறியா இருக்காங்க. அனைத்து மகளிர் காவல்நிலையத்துல புகார் கொடுத்தோம். அந்த பாதிரியார் மேல பாலியல் பலாத்காரம் பிரிவுகள்ல வழக்குப் பதிவு செஞ்சு, அவரை கைது செஞ்சிருக்காங்க. அவருக்கு  கடுமையான தண்டனைக்கொடுக்கணும்’’ என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...