News
Loading...

முட்டைக்கோஸ் சூப்

முட்டைக்கோஸ் சூப்

தேவையானவை: பொடியாக அரிந்த முட்டைக்கோஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சோள மாவு, மிளகுத்தூள்- தலா 2 டீஸ்பூன், பால் - அரை கப், பிரெட் துண்டுகள் - சிறிதளவு, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்து தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் பால், சோள மாவுக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி இறக்க வேண்டும். பரிமாறும் முன்னர் பிரெட் துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் K நிறைந்துள்ளது. அல்சைமர் எனும் மறதிநோயைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மார்பகம், குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பாதுகாக்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...