News
Loading...

தமிழகம் பொருளாதார நெருக்கடியில் உள்ளதா? அரசு செயலர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் பொருளாதார நெருக்கடியில் உள்ளதா? அரசு செயலர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'தமிழகம், பொருளாதார நெருக்கடி யில் உள்ளதாக, அரசு அறிவிக்கப் போகிறதா' என்பதற்கு பதிலளிக்கும்படி, நிதித்துறை செயலருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக நீதித்துறைக்கு, நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, 2002ல், வழக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். 

மேலும் நீதித்துறைக்கு தேவையான உட் கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவரும் மனு தாக்கல் செய்தார். 

அத்துடன், சார்பு நீதிமன்றங்களுக்கு மரத்தி லான பொருட்கள் வாங்குவது தொடர்பான விவகாரத்தில், 9.41 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றமும் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதிகள் சிவஞானம், மகாதேவன் இடம்பெற்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. 

அப்போது, தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. பதில் மனுக்களை படித்த நீதிபதிகள், மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிறப்பித்த உத்தரவு:

ஜனநாயக துாண்களில் ஒன்றான நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், நீதித்துறையை நடத்துவதற்கும் தேவையான நிதி ஒதுக்காததும் வேதனை அளிப்பதாக உள்ளது. மாநில நீதித்துறை அகாடமி செயல்படுவதற்கான நிதி ஒதுக்காததால், இரு பயிற்சி திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், 35 லட்சம் ரூபாய், கூடுதல் நிதி ஒதுக் கீட்டுக்கான திட்டங்களை அரசு பரிசீலித்து, 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை மட்டும் பார்க்கமுடியவில்லை.

மத்திய அரசு திட்டங்களை பொறுத்தவரை, அதற்குரிய நிதியைப் பெறுவதில் மாநில அரசு 
திறமையுடன் செயல்படாததால், 150 கோடி ரூபாய், மத்திய அரசு நிதி காலாவதியாகி விட்டது.

நீதித்துறைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை; மத்திய அரசு, அதற்கு உதவி தான் செய்ய முடியும்.

மாநில அரசு பொருளாதார நெருக்கடி நிலை யில் உள்ளதா அல்லது பொருளாதார நெருக் கடி நிலையில் இருப்பதாக அறிவிக்கும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? 

அப்படியெனில், மாநில அரசின் நிதி சம்பந்தப் பட்ட விஷயங்கள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின், 360வது பிரிவை அமல்படுத்தச் செய்யலாம். 

மேலும் மாநிலம், பொருளாதார நெருக்கடி நிலையில் இருப்பதாக அரசு அறிவிக்கப் போகிறதா என்பது குறித்து, தமிழக நிதித்துறை செயலர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...