News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவனை திருமணம் முடித்த பெண் போலீஸ்: செய்தி
இதை விட பெரிய தண்டனைய அந்தாளுக்கு எந்த கோர்ட்டுலயும் குடுக்க முடியாது

கால தாமதமாக வந்து சேர்ந்தது பருவமழை: செய்தி
என்ன இருந்தாலும், ரமணன் ஒரு ஆளுக்கு தான்யா புயலும், மழையும் கட்டுப்பட்டது

ஜியோ நெட்வொர்க் பிரச்சனையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள் அமைக்கப்படும்: செய்தி
என்னடா திடீர்னு பெட்ரோல் விலை ஏறுதேன்னு பாத்தேன். இதானா சங்கதி!

மவுலிவாக்கம் கட்டிடம் இடிப்பதற்கு ஆகிய செலவு 50 லட்சம்: தமிழக அரசு
அந்த நாலு தூணையும் கட்டுறதுக்கே இம்புட்டு செலவு ஆகிருக்காது போலருக்கே ஆபீஸர்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலைய மேற்கூரை விழுந்தது: செய்தி
இது என்னவோ நம்மளை தலைக்கவசம் போட வைக்குறதுக்காக நம்ம அரசாங்கம் பண்ணுன இராசதந்திரமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு

பேரவை நடந்த 36 நாட்களுக்கு ஜெனரேட்டர் வாடகை 5.24லட்சம்: செய்தி
ஒரு “மின் மிகை” மாநிலத்தோட சட்டப்பேரவையே ஜெனரேட்டர் கரண்டுலதான் நடந்துருக்குங்குறத நெனைச்சாதான்...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...