News
Loading...

தெலங்கானாவில் வாஸ்து தலைவிரித்து ஆடுகிறது..!

தெலங்கானாவில் வாஸ்து தலைவிரித்து ஆடுகிறது..!

? வாஸ்துவில் அதிக நம்பிக்கையுடைய   தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அந்த மாநிலத்தில் எந்தக் கட்டடம் கட்டினாலும் அவரது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் ஒப்புதலுடன்தான் கட்டுகிறாராமே?

! ஆமாம். வாஸ்து நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா என்பவரை அரசின் ஆலோசகர்களில் ஒருவராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நியமித்துள்ளார். இந்த வாஸ்து நிபுணர், முதல்வர் நடத்தும் முக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். இவருக்கு கேபினட் அந்தஸ்து தரப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மாநிலத்தின் தலைமைச் செயலகம் ஐதராபாத் உசைன் சாகர் ஏரிக்கு அருகில் இருக்கிறது. இதில் இருந்து தலைமைச் செயலகத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளார்கள். புதிய இடம் தேர்வுசெய்து கொடுத்ததும், அதற்கான வடிவமைப்பு செய்வதும் இந்த சுத்தலா சுதாகர் தேஜாதான். இது சம்பந்தமான அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ‘இந்தக் கட்டடம் வாஸ்துப்படி சரியாக இல்லை. இந்த இடத்துக்கு வாஸ்து தோஷம் உள்ளது. அதனால்தான் யாரும் நிம்மதியாக ஆள முடியவில்லை. இதற்கு வரலாற்றில் இருந்து என்னால் ஏராளமான ஆதாரங்களைச் சொல்ல முடியும்’ என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு வாஸ்து தலைவிரித்து ஆடுகிறது தெலங்கானாவில்!

இப்படிப் பார்த்தால் எல்லா மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறிக்கொண்டும், ஸ்திரத்தன்மை இல்லாமலும்தான் இருக்கின்றன. அதற்காக வீட்டை மாற்றுவதுபோல தலைமைச்செயலகத்தை மாற்றிக்கொண்டே இருக்க முடியுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...