News
Loading...

இந்திய வீரரின் தலையை துண்டித்துக் கொன்று பாக்., ராணுவம் அட்டூழியம்

இந்திய வீரரின் தலையை துண்டித்துக் கொன்று பாக்., ராணுவம் அட்டூழியம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மஞ்சில் பகுதியில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்தும், உடலை சிதைத்தும் கொன்றது, மேலும் இரண்டு வீரர்களையும் பாக்., ராணுவத்தினர் கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி மிகக்கடுமையாக இருக்கும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவம் அமைத்த எல்லை நடவடிக்கை குழு, இந்திய பகுதிக்குள் ஊடுருவி, இந்த அட்டூழியத்தை செய்த பின்னர் தப்பி சென்றது. பாகிஸ்தான் எல்லையருகே அமைந்துள்ள மச்சில் பகுதி, அடர்ந்த வனமாக உள்ளது. இதனால் பயங்கரவாதிகள் இப்பகுதியை பயன்படுத்தி எளிதாக ஊடுருவுகின்றனர். கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு தான், இந்திய ராணுவ வீரர் மந்தீப் சிங் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்து கொன்றது. 

சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்ததில், 17 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...