News
Loading...

டவுன்லோடு செய்ய வேண்டாம்: வாட்ஸ்-அப் வீடியோக்களை இனி அப்படியே பார்க்கலாம்

டவுன்லோடு செய்ய வேண்டாம்: வாட்ஸ்-அப் வீடியோக்களை இனி அப்படியே பார்க்கலாம்

ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷனான வாட்ஸ்-அப்பில், இனி வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் பார்க்க முடியும்.

ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் யாரும் வாழ முடியாது என்ற அளவிற்கு, தொழில்நுட்பத்தோடு பின்னி பிணைந்து விட்டோம். இதில் குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் வாட்ஸ்-அப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் குறுந்தகவல், ஆடியோ, வீடியோ, ஃபைல்கள் உள்ளிட்டவற்றை எந்த நேரத்திலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

இதுவரை வாட்ஸ்-அப்பில் வீடியோக்களை டவுன்லோடு செய்த பிறகே பார்க்க முடிந்தது. ஆனால் வாட்ஸ்-அப்பிற்கு வந்துள்ள புதிய அப்டேட்டில், இனி வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் பார்க்கலாம். இதனால் வீடியோ டவுன்லோடு ஆகும் வரை, இனி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னதாக வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலிங் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English Summary : WhatsApp will now let users watch videos without downloading them.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...