News
Loading...

வங்கிகள், ஏடிஎம்களுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

வங்கிகள், ஏடிஎம்களுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த 8-ம் தேதிக்கு பிறகு ‘ஜீரோ பேல ன்ஸ் அக்கவுண்ட்டுகளில் டெபாசிட்டுகள் அதிகரித்து வருவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் மத்திய அரசின் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி நடவடிக்கையால், கடந்த 9-ம் தேதி முதல் அனைத்து வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வங்கிகளில் இருப்பு இருந்த ரூ. 100 நோட்டுகளும் மக்களிடம் வழங்கப்பட்டதால், தற்போது புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

வங்கியில் பத்தாயிரம் ரூபாய் எடுத்தால் 2 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகளும், ரூ. 8 ஆயிரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் வழங்கப் படுகின்றன. இந்த நோட்டுகளை கடைகளில் கொடுத்து சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தல்லாகுளம், அண்ணாநகர் உட்பட சில இடங்களில், வங்கிகளில் கணினிகள் நேற்று செயல் இழந்ததால் மக்கள் வெகுநேரம் காத்திருந்தனர். ஒரு சில ஏடிஎம் மையங்கள் இயங்கினாலும், குறைந்த அளவு நபர்கள் மட்டுமே பணம் எடுக்க முடிந்தது.


வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான அளவு 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. ஓரிரு நாளில், அந்தந்த மாநில வங்கி மற்றும் ஏடிஎம்களுக்கு தேவையான ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். மதுரைக்கு ரூ. 25 கோடி அளவுக்கு பணம் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை பிரித்து அனுப்ப ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் அந்த நாட்களில் வங்கிகள், ஏடிஎம்களுக்கு மீண்டும் விடுப்பு அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுகளை எடுக்க புதிய வடிவிலான பிளேட்டுகளும் ரிசர்வ் வங்கியில் இருந்து அனுப்பப்படுகிறது. அவற்றை பொருத்தினால் மட்டுமே ஏடிஎம்களில் புதிய ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும்.

பெரும்பாலும் பணம் பரிவர்த்தனை இன்றி இருந்த ‘ஜீரோ’ இருப்பு வாடிக்கையாளர் கணக்கில் கடந்த 8-ம் தேதிக்குப் பின், டெபாசிட் தொகை அதிகரித்து வருகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையின்றி அடுத்தவர்களின் பணத்தை தங்களது கணக்கில் வரவு வைத்து மாற்றித் தரும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றார்.

பணத்தை பிரித்து அனுப்ப ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் வங்கிகள், ஏடிஎம்களுக்கு மீண்டும் விடுப்பு அறிவிக்கும் வாய்ப்புள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...