News
Loading...

தக்காளி - கேரட் சூப்

தக்காளி - கேரட் சூப்

தேவையானவை: நறுக்கிய தக்காளி - 2, கேரட், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நறுக்கிய புதினா இலைகள் - 2 டீஸ்பூன், பிரியாணி இலை - ஒன்று, பால் - 1/4 டம்ளர், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து, வெண்ணெய்யைப் போட்டு சூடானதும் வெங்காயம், கேரட் போட்டு வதக்க வேண்டும். பின்னர், தக்காளியை வதக்கி, பிரியாணி இலையைச் சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு அதை இறக்கி, ஆறியதும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீருடன் பால், மிளகுத்தூள், சோள மாவைக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், புதினா இலைகளைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பொட்டாசியம், ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்தது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வராமல் காக்கிறது. கேரட்டில் உள்ள கரோட்டினாய்ட்ஸ், பார்வைத்திறனை மேம்படுத்தும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நல்லது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...