News
Loading...

தக்காளி இட்லி

தக்காளி இட்லி

தேவையானவை: இட்லி - 3, நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1, வெல்லப்பாகு, இஞ்சி, பூண்டு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலை - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளித் துண்டுகளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, நன்றாக மசாலா போல தயார்செய்யவும். இதில், சிறிது அளவு வெல்லப்பாகைச் சேர்க்க வேண்டும். இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, மசாலாவுடன் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

பலன்கள்: தக்காளியில் வைட்டமின் பி6, கே, இ, பொட்டாசியம் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவு இது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...