News
Loading...

வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்?

வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்?

வாய்ச் சவடால்களால் புகழ்பெற்ற டிரம்ப் ஒருவேளை அமெரிக்க அதிபர் ஆகிவிட்டால் என்ன நடக்கும்? அமெரிக்க அதிபர் நிஜமாக எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்பட முடியும்? ஒரு கற்பனை உரையாடல் இணையத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. அது இங்கே...

அதிபர் அலுவலகத்தில் முதல் நாள் டிரம்ப் எதிரே ராணுவ அதிகாரிகள், சி.ஐ.ஏ உளவுப்படைத் தலைவர், எஃப்.பி.ஐ போலீஸ் படைத் தலைவர் அமர்ந்திருக்கிறார்கள். 

டிரம்ப்: ஐ.எஸ். தீவிரவாதப் படையை உடனே அழிக்க வேண்டும்!

சி.ஐ.ஏ: அது முடியாது சார்! துருக்கி, சவுதி, கத்தார் நாடுகளோடு இணைந்து நாம்தான் அந்தப் படையை உருவாக்கினோம்.

டிரம்ப்: அப்படியானால் பாகிஸ்தானுக்கு நாம் உதவி செய்வதை நான் நிறுத்துவேன். 

சி.ஐ.ஏ: அது முடியாது சார்! அப்புறம் இந்தியா வலிமை பெற்றுவிடும். காஷ்மீரில் அமைதி ஏற்பட்டுவிடும். அப்புறம் இந்தியா நம்மிடம் ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்திவிடும்.

டிரம்ப்: சரி, தாலிபன் தீவிரவாத இயக்கத்தை அழிக்கலாம் அல்லவா?

சி.ஐ.ஏ: அதுவும் சரியில்லை சார்! ரஷ்யர்களோடு சண்டை போட தாலிபன்களை நாம்தான் உருவாக்கினோம். இப்போது அவர்கள்தான் பாகிஸ்தான் ராணுவத்தை பிஸியாக வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பாகிஸ்தான் நம் ஆயுதங்களை வாங்குகிறது.

டிரம்ப்: சரி, தீவிரவாதிகளை ஆதரிக்கும் வளைகுடா நாட்டு அரசுகளை நான் அழிப்பேன். சவுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்...

ராணுவம்: அதை நீங்கள் செய்ய முடியாது சார்! அவர்களின் எண்ணெய் நமக்கு வேண்டும் என்பதற்காக நாம்தான் இந்த மன்னர்களை ஆதரிக்கிறோம். அங்கு ஜனநாயகம் வந்துவிட்டால் எண்ணெய்க்கிணறுகள் அவர்களுக்கு சொந்தமாகிவிடும். அது ஆபத்து!

டிரம்ப்: சரி, இரான் நமக்கு எதிரி நாடுதானே! அவர்களைத் தாக்குவேன்.

ராணுவம்: சாரி சார்! அவர்கள் வலிமையாக இருப்பதால்தான் இஸ்‌ரேல் அடங்கி இருக்கிறது. இரான் பலவீனமாவது நமக்கு ஆபத்து!

டிரம்ப்: சரி, நான் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பேன்.

எஃப்.பி.ஐ.: அதைச் செய்ய முடியாது சார்! அப்புறம் நம் மக்களுக்கு பயம் போய்விடும்!

டிரம்ப்: சரி, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்காவை விட்டே விரட்டுவேன்!

எஃப்.பி.ஐ.: அவர்களை அனுப்பிவிட்டால், அப்புறம் சின்னச்சின்ன வேலைகள் செய்ய ஆளே கிடைக்க மாட்டார்கள் சார்!

டிரம்ப்: சரி, இந்தியர்களுக்கு H1B விசா வழங்குவதை நிறுத்துவேன். அவுட்சோர்ஸிங்குக்கு தடை விதிப்பேன்.

எஃப்.பி.ஐ.: நீங்கள் அதைச் செய்ய முடியாது சார்! அப்புறம் அமெரிக்காவே ஸ்தம்பித்துவிடும். சொல்லப் போனால், நம் வெள்ளை மாளிகையின் தினசரிப் பணிகளைக்கூட பெங்களூருவில் இருக்கும் ஒரு நிறுவனம்தான் குறைந்த செலவில் செய்துகொடுக்கிறது! 

டிரம்ப் (எரிச்சலோடு): அப்புறம் நான் என்னதான் செய்வது?

சி.ஐ.ஏ.: வெள்ளை மாளிகையில் இருக்கும் வசதிகளை அனுபவியுங்கள். உலகம் சுற்றிப் பாருங்கள். மற்றதை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.