News
Loading...

பெர்முடா மர்மம் அவிழ்ந்தது?

பெர்முடா மர்மம் அவிழ்ந்தது?

*அயர்லாந்து நாட்டில் எட்டடி, பத்தடி உயர மனிதர்கள் இருந்ததாகவும், அவர்கள் பல சாகசங்கள் செய்ததாகவும் உள்ள  கதைகள் உலகின் மற்ற நாடுகளை விட  அதிகம். அதற்கான  பின்னணி பற்றி   விஞ்ஞானிகள்  ஆய்வு செய்து, ‘அயர்லாந்து நாட்டில் பத்தடி உயர மனிதர்கள் வாழ்ந்தது உண்மைதான்’ என்ற முடிவுக்கு வந்துள்ளனர். 

அம்முடிவுக்குக் காரணம், வட அயர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணு,  ராட்சத உருவை  உருவாக்கும் மரபணுவாக உள்ளதுதான். இப்போதைய மனிதர்கள் உடலில் தற்போதும் காணப்படும் இம்மரபணு செயல் புரியாமல் முடங்கியுள்ளதாம். இந்த மரபணு செயல்பட ஆரம்பித்தால் ஆபத்தை ஏற்டுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

*ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை  ஆஸ்திரேலியாவின்  மூன்றாவது தேசிய மொழியாக அறிவித்து அதிகாரபூர்வமாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன?

வடக்கு அமெரிக்காவுக்குக் கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ‘பெர்முடா முக்கோணம்’. இதை சாத்தானின் முக்கோணம் என்று அப்பகுதி  மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். 

‘‘பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும்போது திசைகாட்டிகள் செயலிழக்கின்றன’’ என்று முதன்முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிபந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’ என்கிற கப்பலும், 1918ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போயின.

1945ம் ஆண்டு ‘ஃபிளைட் 19’ வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப் பகுதியிலிருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம்தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. 

அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தன. திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை. 

இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.

சமீபத்தில் பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு புதிய காரணியை  ஆய்வின் முடிவில் வெளியிட்டு இருக்கிறார்கள். 

அது,    ‘பெர்முடா  பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான காற்றும், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுங்கோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்று அழுத்தமும்தான்  காரணம்’ என்பதுதான். அந்தக் காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, ‘‘செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், இந்தக் காற்று வடிவங்கள் மிகவும் வினோதமான வடிவில் இருக்கின்றன. 

இவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றிருக்கிறார்.காலங்காலமாய் புரியாத புதிராக இருந்த பெர்முடா முக்கோணப் புதிர் அவிழ்க்கப்பட்டது போல் தெரிகிறது. உண்மையான காரணம் இதுதானா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.