News
Loading...

தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க டெல்லி அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும்

தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க டெல்லி அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: டெல்லியில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முடிவு கட்ட புதிய இணையதளம் ஒன்றை அம்மாநில அரசு கடந்த 17ம் தேதி தொடங்கியிருக்கிறது. அதில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் கட்டண கொள்ளை பற்றி பெற்றோர் புகார் செய்யலாம். அடுத்த 15 நாட்களில் புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அதை புகார் தாரருக்கு தெரிவிப்பார்கள். புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை விட பல மடங்கு கல்வி கட்டணக்கொள்ளை தலைவிரித்தாடும் தமிழகத்தில் இத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் அதை தடுக்க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏராளமான வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறது. அதற்குப் பிறகும் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. எனவே, டெல்லி அரசை பின்பற்றி தமிழக அரசு கல்விக்கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...