News
Loading...

காந்தியை மாற்றிய புத்தகம்

காந்தியை மாற்றிய புத்தகம்

நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த விலங்கு, காந்தியை வசீகரித்த ஆன்மிக நூல், நதியைக் கடந்த நீச்சல் வீரர் என உங்களை வசியப்படுத்தும் பல புதிய புதுமை தகவல்களை வாசிக்க வாருங்கள்! 

*இந்தியாவில் மும்பை, பெங்களூரு என இரு இடங்களிலும் கடந்த 6 ஆண்டுகளாக பூனைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 

*கூகுள் நிறுவன தலைமை நிர்வாகி ராஜன் ஆனந்தனின் தந்தை குமரன், இந்தியா- இலங்கையைப் பிரிக்கும் 53 கி.மீ. நீள பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

காந்தியை மாற்றிய புத்தகம்

*ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசி 70 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக ஜப்பானுக்குச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆவார். 

*தென் பசிபிக் கடலில் Palmerston Atoll என்ற தீவில் உள்ளவர்களில் பலர் Marsters என்ற பெயரை தங்கள் முதல் பெயராக வைத்துள்ளனர்.

*இணையதள விளையாட்டினை  சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ள முதல் மாநிலம் நாகாலாந்து ஆகும். 

*அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 70 - 80 வயதிற்கு இடையிலான கன்னியாஸ்திரீகள் தங்களுக்குச் சொந்தமான 22 ஆயிரம் சதுர அடி நிலத்தை பாப் பாடகி கேட்டி பெர்ரிக்கு விற்க மறுத்துவிட்டனர்.

*இந்தியாவில் 1 கி.கி. உமி நீக்கிய அரிசியை உற்பத்தி செய்ய 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உலகளவில் இது சராசரியாக 2 ஆயிரத்து 173 லிட்டராக உள்ளது.

*சிட்னியில் ஆஸ்திரேலிய நாயான ப்ளூயி(1910 - 1939) தன்னுடைய 29 வயது 5 மாதத்தில் இறந்தது. இதுவே உலகில் அதிக காலம் வாழ்ந்த நாயாகும். 
நாயின் சராசரி வாழ்நாள் 8 -15  ஆண்டுகளாகும்.  ப்ளூயி நாயின் வாழ்நாளை மனிதனோடு ஒப்பிட்டால், 164 ஆண்டுகள் வாழ்ந்ததற்கு சமம். 

*லக்னோவில் முன்னாள் சிவசேனைக் கட்சிக்காரர் சுனில் ஜெயின் தன்னுடைய வீட்டிற்கு அருகிலிருந்த சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக இஸ்லாமில் இணைந்து முகமது அப்துல் சமாத் என பெயர் மாற்றிக்கொண்டார். 

*ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவரோடு பணிபுரியும் சக அதிகாரிகளைவிட குறைவாகவே 1 லட்சத்து 98 ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

*1919 இல் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய கர்னல் டையரின் தந்தைதான் 1855 ஆம் ஆண்டு ஓல்ட் மங்க் ரம்மை கண்டுபிடித்தவராவார்.

*மோகன்தாஸ் காந்தி, தாமஸ் கார்லைல் எழுதிய On Heroes: Hero worship and Heroic in History  என்ற நூலைப் படித்த பிறகே முகமது நபியைப் போற்றும் அபிமானி ஆனார்.

*சென்னை முதலைப் பண்ணைக்கு உலகில் வாழும் உயிரிகளிலேயே பெரிய பல்லியான கொமோடோ டிராகன்  வந்துள்ளது. இது முன்றரை மீட்டர். நீளமும் 80 கிலோ எடை வரையும் கொண்டிருக்கும். இந்தோனேசியாவின் கொமோடோ, ரின்கா, ஃப்ளோரெஸ் தீவுகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. 

*டிஸ்னியின் ஜங்கிள் புக் திரைப்படம் வெளியான முதல் 12 நாட்களில் ரூ.113.70 கோடி வசூலை அள்ளியது.

*முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்ற ரீதியில் பல்கலைக்கழகக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் சிறப்பைப் பெற்றார். இவர், தான் படித்த இப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

*கடந்த ஆண்டில் பா.ஜ.க.விற்கு அளிக்கப்பட்ட ரூ.940 கோடி ரூபாய் நன்கொடைகளில் ரூ.505 கோடியை வழங்கியவர்கள் யார் என்பதே தெரியவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.