News
Loading...

வளைவான பொருட்களை அளக்கும் டிஜிட்டல் லேசர் பேனா!

வளைவான பொருட்களை அளக்கும் டிஜிட்டல் லேசர் பேனா!

எவ்வளவு காலம்தான் நாமும் டேப்பை இழுத்துப் பிடிக்க இன்னொருவரை அழைத்தபடியும், நடராஜ் ஸ்கேலையும், ரூலரையும் கையில் பிடித்தபடி நகராமல் சிலைபோல நின்று தவம் செய்வது? நமது மனதின் குரல் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்திற்கு கேட்டுவிட்டது. நம் வேதனையைப் போக்க அதன் ஆராய்ச்சியாளர் லேடன் பார்பரா தன் மூளையைக் கரைத்து கண்டுபிடித்ததுதான் இந்த அட்டகாசமான ஆல்டர்னேட்டிவ் 3டி டிஜிட்டல் லேசர் பேனா. 

நேராக இருக்கும் பொருட்களுக்கு டேப், ஸ்கேல், ரூலர் ஓகே. ஆனால் ஒழுங்கற்ற வளைவான பொருட்களுக்கு? இங்குதான் ஆட்ட நாயகனாகிறது இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்தின் 01 லேசர் பேனா.  இதன் மூலம் நேரான பொருட்களையும், ஒழுங்கற்ற வடிவம் கொண்டவற்றை  3டி லேசர் ஒளி மூலம் ஜஸ்ட் லைக் தட் எனவும் அளக்கலாம். 

ஒருமுனையில் பேனா, மறுமுனையில் லேசர் அளவுகோல் என டூ இன் ஒன் டிவைஸ் இது. ஒரு பொருளை அளக்க அதன் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை இதனை உருட்டினால், இதன் ஆப் மூலம் ப்ளூடூத்தில் ஸ்மார்ட்போனோடு இணைத்து அளவுகளை பதிவு செய்யலாம். அதிலிருந்து தகவல்களை வேறு கருவிகளுடன் பரிமாறவும் முடியும்.  

பொறியாளர்கள் பயன்படுத்தும் 3டி அளவுகோல்கள் தரத்தில் சூப்பர் என்றாலும் அதன் விலை ரேஞ்ச் 40 - 85 ஆயிரம் என பர்ஸை சைஸ் ஜீரோவாக்குவதோடு அளவிலும் பெரியதாக இருக்கும். 3 மாடல்களில் கிடைக்கும் இந்த 01 அலுமினிய லேசர் பேனா தன் ஸ்லீக் டிசைனிலும் செயல்பாட்டிலும் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது. இதனுள் உள்ள பேட்டரியை 6 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். 9 ஆயிரத்து 933 ரூபாய் கொடுத்தால் இந்த டிஜிட்டல் பேனா உங்கள் பாக்கெட் வசமாகும். உடனே புக் செய்து டிஜிட்டல் மனிதனாகுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்