News
Loading...

இருமுறை பிறந்த அதிசயக் குழந்தை!

இருமுறை பிறந்த அதிசயக் குழந்தை!

தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தபிறகு பல்வேறு சவால்களை ஒன்மேன்ஆர்மியாக சந்தித்து வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து பாடப்புத்தகத்தில்நம் பெயரை ரிஜிஸ்டர் செய்வதெல்லாம் ஓகே. 

இதெல்லாம் சரியாக தாயின் கருவிலிருந்து வெளியே ஆரோக்கியமாக வந்தால்தானே சாத்தியம். பிறக்கும் முன்பே கருவிலேயே டஜன் கணக்கில் சவால்களைச் சந்திக்கும் டிசைன் சிலருக்கு மட்டும்தான் அமைகிறது. அப்படி ஒரே ஆண்டில் இருமுறை பர்த்டே ஸாங் பாடியஅதிர்ஷ்டப் பெண்ணின் செம ட்விஸ்ட் ஸ்டோரிதான் இது.

அமெரிக்காவிலுள்ள மார்க்கரெட் போமர் என்ற பெண்ணுக்கு அவரது 3 வது குழந்தையாக உருவான சிசு வயிற்றில் தங்கி 23 வாரங்கள்5 நாட்கள் ஆனபோது, அவரது குழந்தை லின்லீயின் முதுகெலும்பில்கிடுகிடு வளர்ச்சி காட்டி நடுக்கம் தந்த கட்டிஅகற்றப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்! ஆனால் இதற்காக மார்க்கரெட்டின் கருப்பையிலிருந்து லின்லீயை வெளியே எடுத்து கட்டியை நாசூக்காக அறுவை சிகிச்சையில் நீக்கி பின் மீண்டும் கருப்பையினுள்ளே பொருத்தியிருக்கிறார்கள் என்பது அரிய சாதனைதானே! 

ஏறத்தாழ 5 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சையின்போது,  லின்லீயின் இதயத்துடிப்பு ஜீரோவாக மாறி, மருத்துவர்களை பயமுறுத்தியது. ஆனால் மீண்டும்கருப்பையில் அவளை சரியானபடி வைத்தவுடன் இதயச்செயல்பாடு சீராகி மருத்துவக்குழுவே ஆசுவாச பெருமூச்சு விட்டுள்ளது. கருப்பையில் பத்திரமாக வைக்கப்பட்ட லின்லீ, தற்போது 3மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகப் பிறந்து தன் சொந்தங்களை ஹேப்பிபர்த்டே பாட்டை ரிப்பீட்டாக பாட வைத்துள்ளது.

சரி, கட்டி கண்டுபிடிக்கப்பட்டது எப்போது? 

மிஸஸ். போமருக்கு குழந்தை உருவாகிய 16 வாரத்தில் செய்த நார்மல் செக்கப்பில்தான்லின்லீயின் முதுகுத்தண்டில் திசுக்கட்டி உருவாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துச் சொல்லி அவர்களும் ஷாக்கானார்கள். அதிர்ச்சியில்உறைந்த மிஸஸ். போமருக்கு சிகிச்சையளித்த பல்வேறு மருத்துவர்களும் கூறிய ஒரே அட்வைஸ், வயிற்றிலுள்ள கருவைக் கலைத்து விடுங்கள் என்பதுதான். 

டெக்ஸாஸைச்சேர்ந்த லூயிஸ்வில்லே நகர குழந்தை கரு மைய மருத்து வர்கள் மட்டும் குழந்தையின் கட்டியை அகற்ற நாங்க இருக்கோம்! என அன்லிமிட்டெட் தைரியம் தந்தனர். குழந்தையின் தாய் ஆபரேஷனுக்கு ஓகே சொல்லிவிட்டாலும் மருத்துவர்கள்எடுக்கும் ரிஸ்க் எப்போதும் அசாதாரணம்தானே! 

கட்டியை அகற்றுவதற்கான  5 மணிநேர அறுவை சிகிச்சைக்காக லின்லீயை வெளியே எடுத்தபோது அவளின் எடை வெறும் 45 கிராம்தான்.  கருப்பையிலிருந்து கருவை வெளியே எடுத்து ஆபரேஷன்செய்து, அதனை மீண்டும் பக்குவமாக கருப்பையினுள்வைத்து இயக்கத்திற்குக் கொண்டு வந்த முழு நிகழ்வுமே பரவசமான அனுபவம் என நெகிழ்கிறார் மருத்துவர். டாரல் காஸ்.‘‘என் குழந்தை உயிரோடு பிறந்தது அதிசயம்தான். 

23 வாரங்களாக குழந்தையின் முதுகெலும்பில் வளர்ந்த கட்டியினால் அவளின் இதயத்துடிப்பு மெல்ல குறைந்து வந்தது. லின்லீக்கு இதயச்செயலிழப்பு ஏற்படும் ஆபத்து இருந்ததால் எனக்கே நம்பிக்கை வற்றிவிட்டது. எங்கள் முன்  இருந்தது 2 வாய்ப்புகள்தான்; ஒன்று கட்டியோடு குழந்தையை அழித்துவிடுவது, அல்லது குழந்தைக்கு உலகை தரிசிக்கும் வாய்ப்பளிப்பது. நாங்கள் இரண்டாவதை நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்தோம்’’ என்று குழந்தையை கையில் ஏந்தி, புன்னகையோடு பேசுகிறார் திருமதி போமர்.

ஜூன் 6, 2016 ஆம் ஆண்டு அன்று இரண்டாவது முறையாக உலகிற்கு ஹாய் சொல்லிப் பிறந்த லின்லீ 2.26 கி.கி எடையோடு ஆரோக்கியமாக பிறந்திருக்கிறாள். 70 ஆயிரம் குழந்தைகளில் ஆண்களை விட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இதுபோல கட்டி உண்டாகும்வாய்ப்பு 4 மடங்கு அதிகம். இயல்பாக த் தோன்றும் இத்தகைய கட்டிகளை பிரசவத்தின்போது குழந்தைகளோடு சேர்த்து வெளியே எடுத்து விடுவோம்.

மிகச்சில சமயங்களில்தான் இவை கருவை பாதித்து, கருவுக்குள்வரும் ரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன என வெற்றி பூரிப்பில் விரிவாகத் தனது செயல்பாடுகளை விளக்குகிறார் மருத்துவர். காஸ். பிறந்த 8  நாட்களுக்குப் பிறகு அவள் உடலில் மிஞ்சியகட்டியின் திசுக்கள் மற்றொரு அறுவைசிகிச்சையில் அகற்றப்பட்டு தாயின் மடியில் லின்லீ உறங்கியபடி நலமாக இருக்கிறாள். அதிசயப்பிறவி லின்லீ.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.