News
Loading...

தோளோடு தோள் சேர்த்து உழைக்கலாம்: ரஜினிக்கு மோடி நன்றி!

தோளோடு தோள் சேர்த்து உழைக்கலாம்: ரஜினிக்கு மோடி நன்றி!

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்த நடவடிக்கையால் மக்கள் பீதியடையத் தேவையில்லை. மேற்கண்ட நோட்டுகளை இன்னும் 50 நாள்களுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும், இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளிவந்த சிலமணி நேரங்களில் ட்விட்டரில் ரஜினி, மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். நரேந்திர மோடி அவர்களுக்குப் பாராட்டுகள். புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டார். இதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நன்றி. அனைவரும் தோளோடு தோள் சேர்த்து உழைத்து, வளமான ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று மோடி பதிலளித்துள்ளார்.


தோளோடு தோள் சேர்த்து உழைக்கலாம்: ரஜினிக்கு மோடி நன்றி! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...