News
Loading...

விளையாடும் ரோபோ!

விளையாடும் ரோபோ!

ஜெர்மனியின் ஃப்ரீபர்க் பல்கலைக்கழக ரோபோடிக் பேராசிரியர் டேவிட் வோக்ட். வண்ணக் கட்டங்களை அடுக்கி உருவங்களை உருவாக்கும் ‘லீகோ’ விளையாட்டு இவரது மகனுக்கு மிகவும் பிடிக்கும். மகனோடு அடிக்கடி விளையாடி வந்த அவருக்கு, லீகோ அடுக்கும் ரோபோ ஒன்றை உருவாக்கினால் என்ன எனத் தோன்றியது. 

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ஒரு ரோபோவை எடுத்து வந்து, சில புரோகிராம்களை அமைத்து, அதன் எதிரே இரண்டு பேரும் கேம் விளையாடினார்கள். தன் கேமரா கண்களால் அதைத் பார்த்துக்கொண்டிருந்த ரோபோ, உடனே விளையாட ஆரம்பித்தது. ‘‘மனிதர்களைவிட கச்சிதமாக இது விளையாடுகிறது. நேர்த்தியாக கட்டங்களைக் கண்டெடுத்து அடுக்குகிறது’’ என்கிறார் வோக்ட்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...