News
Loading...

வேடிக்கை செய்திகள்

வேடிக்கை செய்திகள்

*புத்தாண்டு பிறக்கும்போது மஞ்சள் நிற உள்ளாடை அணிந்திருப்பது அதிர்ஷ்டம் தரும் என்பது பெரு நாட்டு நம்பிக்கை.

*பால்வெளி மண்டலம் 100 பில்லியனுக்கும் மேற்பட்ட விண்மீன்களால் உருவானது.

*1503 ஆம் ஆண்டு இத்தாலிய ஓவியர் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட ஆயில் பெயிண்டிங்கான மோனலிசா ஓவியத்தில், மோனலிசாவின் முகத்தில் புருவங்களே இல்லை.

*மனிதரின் உடலிலுள்ள இரும்பின் மூலம் 5.1 செ.மீ அளவுள்ள ஆணியைத் தயாரிக்க முடியும்.

*வரிக்குதிரையும் கழுதையும் இணையும்போது பிறக்கும் கலப்பினக் குட்டிக்கு ஸீடாங்க்(Zedonk) என்று பெயர். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கலப்பினம் உண்டு என்றாலும் இது மிகவும் அரிதானதே.
வேடிக்கை செய்திகள்
*இமயமலைச்சிகரங்கள் ஓவ்வொரு ஆண்டும் 1.3 செ.மீ உயரம் வளர்கின்றன.

*பியானோவை(226கி.கி) விட சிங்கத்தின் எடை(190 கி.கி) குறைவு.

*அமெரிக்காவிலுள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கற்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும்.

*மனிதனின் மூக்கினால் 10 ஆயிரம் வாசனைகளை இனம் பிரித்து அறிய முடியும்.

*வெந்நீரை விட குளிர்ந்த நீரின் எடை அதிகம்.

*ராட்சத ஆமைகள் தம் வாழ்நாள் முழுக்க வளருகின்றன.

*அமெரிக்க பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லியின் தலைமுடி 76 லட்சத்து 91 ஆயிரத்து 219 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

*அமெரிக்க 100 டாலர் நோட்டில் உள்ள மணிக்கூண்டு கடிகாரம் காட்டும் மணி மாலை 4.10 ஆகும்.

*உலகில் அதிக விலைமதிப்பு கொண்ட மர வீடு இங்கிலாந்தில் 3.7 மில்லியன் டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது.

*பெரிய வழுக்கைத் தலை கழுகுகள் கட்டும் கூடுகளின் எடை எவ்வளவு தெரியுமா? 1814 கி.கி.

*பல்வேறு பறவைகளின் இறகின் எடை அதன் எலும்புகளின் எடையை விட அதிகம்.

*ஆந்தைகள் தன்னுடைய கருவிழிகளை அசைக்க முடியாது.
   
*செம்மறி ஆடு, சேவல், வாத்து என மூன்று விலங்குகளுக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இவை மூன்றுமே வெப்பக் காற்று பலூனில் 
பயணித்துள்ளன என்பதேயாகும்.

*நத்தைகளுக்கு 3000 பற்களும், 4 மூக்குகளும் உண்டு.

*ஆழ்கடலில் நீச்சலடிப்பவர்கள் கடிதங்களை அனுப்ப ஜப்பான் கடல் பகுதியில் 10 மீட்டர் ஆழத்தில் தபால்பெட்டி ஒன்று உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்