News
Loading...

அருங்காட்சியகம் கூறும் வரலாறு

அருங்காட்சியகம் கூறும் வரலாறு

அருங்காட்சியகங்களை ரசித்துப் பார்க்க உலகம் சுற்றும் வாலிபனாக மாறும் லட்சிய தாகம் கொண்டவரா நீங்கள்? உங்களது பயணத்தில் அவசியம் காண வேண்டிய உலகின் டாப்  அருங்காட்சியகங்கள் லிஸ்ட் இதோ. ஸ்டேட் ஹர்மிடேஜ் மியூசியம் / குளிர்கால அரண்மனை, ரஷ்யா 1764 ஆம் ஆண்டு ராணி கேத்தரின் செயின்ட்பீட்டர்ஸ்பர்கில் தொடங்கி வைத்த இந்த தொன்மை அருங்காட்சியம், 1852 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. ரஷ்ய பேரரசர்களின் தங்குமிடமாகவும் பயன்பட்டு வந்த இந்த அருங்காட்சியகத்தில் இன்று, உலகின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 3 மில்லியனுக்கும் அதிக கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. 


அருங்காட்சியக வளாகத்திலுள்ள 6 கட்டிடங்களில் குளிர்கால அரண்மனை, பழைய,புதிய, சிறிய அருங்காட்சியகங்கள், அருங்காட்சியக திரையரங்கம் ஆகியவற்றை மக்கள் பார்வையிடலாம். மாதத்தின் ஒவ்வொரு முதல் வியாழக்கிழமையும் அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனஅனைவருக்கும் இலவச விசிட் அனுமதி உண்டு.
அருங்காட்சியகம் கூறும் வரலாறு
உலகம் போற்றும் இத்தாலிய ஓவியரும், சிற்பியுமான மைக்கேல் ஏஞ்சலோ, 1530 ஆம் ஆண்டு உருவாக்கிய 54 மீட்டர் உயரமுள்ள பூர்த்தியாகாத  தி க்ரவுச்சிங் பாய் பளிங்குச்சிலையும் உள்ளது. ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தில்வைக்கப்பட்டுள்ள  மைக்கேல்ஏஞ்சலோவின் ஒரே ஒரு படைப்பு இதுவே. அகாடமியா கேலரி, இத்தாலி 1784 ஆம் ஆண்டு டஸ்கனி அரசர் பியட்ரோ லியோபோல்டோவினால் தொடங்கப்பட்ட அகாடமியா கேலரிஅருங்காட்சியகத்தில் உலகின் மிகச் சிறந்த சிற்பங்களின் சேகரிப்பை கண்டு மெய் மறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் உண்டு.   

உலகின்பிரபல சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவின் பல்வேறு சிற்பங்களும் ஓவியங்களும் இங்குள்ளன. 1504 ஆம் ஆண்டு மைக்கேல் ஏஞ்சலோவினால் உருவாக்கப்பட்ட புகழ் பெற்ற 5.17மீட்டர் உயரச்சிலையான டேவிட், பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து 1873 ஆம் ஆண்டிலிருந்து இக்கண்காட்சியில் இடம்பெற்று பார்வையாளர்களை மேக்னட்டாய்  கவர்ந்து வருகிறது. சாண்ட்ரோ  போட்டி செல்லி, டொமினிகோ கிர்லாண்டையோ, போன்டோர்மோ, ஆண்ட்ரியா டெல்சார்டோ உள்ளிட்ட சிற்பக் கலைஞர்களின் ஆகச் சிறந்த கிளாஸிக் சிற்பங்கள் தனி வசீகரம். 

 மற்றொரு சிறப்பாக, ஐரோப்பாவிலேயேமுதல் கலைப் பள்ளி தொடங்கப்பட்டதும் இங்குதான்! உலகம் போற்றும்இத்தாலிய சிற்பிகள் அனைவரின் ஸ்பெஷல் சிலைகளும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. தற்போது புதிதாகஅமைக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளுக்கான அருங்காட்சியகத்தில் ஸ்டாடிவரி(தந்திக்கருவிகளை உருவாக்கிய இத்தாலியர்), 1699ஆம் ஆண்டு முதன்முதலில்பியானோவை உருவாக்கிய பார்த்தலோமியோ கிறிஸ்டஃபோரி உள்ளிட்டோரின் கருவிகளும் கண்காட்சிக்கு தனி கவர்ச்சி!

தி ஆர்ட் இன்ஸ்டிடியூட், அமெரிக்கா 1879 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில்கிராண்ட் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த தொன்மையான அருங்காட்சியகத்தில், கிராண்ட்  வுடின், ‘அமெரிக்கன் கோதிக்’ உட்பட 3 லட்சம் கலைப்பொருட்கள் நிரந்தர கண்காட்சியில் அணிவகுத்துள்ளன. வாசலில் கம்பீரமான 2 வெண்கல சிங்கங்கள் பார்வையாளர்களை வரவேற்பது தனித்துவ கௌரவம்தானே!

சராசரியாக ஒரு ஆண்டுக்கு 1.5 மில்லியன் மக்கள் சிகாகோ அருங்காட்சியகத்தை பார்வையிடுகின்றனர். 3 தளங்களில் செயல்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில் ஓய்வறைகள், அருங்காட்சியக விற்பனைப்பிரிவு, திரைப்பட காட்சியறை கீழ்த்தளத்திலும், ஜப்பான், கொரியா, சீன, ஆப்பிரிக்க, அமெரிக்க கலைப்படைப்புகள், போர்க்கருவிகள் முதல் தளத்திலும், 1400 - 1900 வரையிலான ஐரோப்பிய கலைப்படைப்புகள் இரண்டாம் தளத்திலும் உள்ளன. 

இங்கு ஒவ்வொருஆண்டும் 30 சுழலும் அமைப்பிலான கண்காட்சிகளும், 100க்கும் அதிகமான ஸ்பெஷல் கண்காட்சிகளும் நிகழ்வது கலாரசிகர்களுக்கு தலைவாழை விருந்துதானே! தி கெட்டி சென்டர்,அமெரிக்கா(லாஸ் ஏஞ்சல்ஸ்) 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குன்றிலுள்ள ஜே. பால்கெட்டி அருங்காட்சியகம் 1.3 பில்லியன் டாலர்கள் செலவில் படுகிராண்டாக தொடங்கப்பட்டதாகும். கட்டிடக்கலை, தோட்டம், பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கான வசதிகள் என பாராட்டப்படும் இங்கு, வான்கா, மோனட், செசானேயின்ஆக்கங்கள் உட்பட 44 ஆயிரம் கலைப்பொருட்களைப்  பார்க்கலாம்! 

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்குமிருந்து 1.3 மில்லியன் மக்கள் இந்த கெட்டி அருங்காட்சியகத்தை ரசிக்க வருகிறார்கள் என்றால் சும்மாவா என்ன? 19 -20 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கலைப்படைப்புகள், சிற்பங்கள் உள்பட 1200க்கும் அதிகமான கலைப் பொருட்கள் இங்கு உள்ளன. இங்கு ஸ்பெஷல்கம்ப்யூட்டர்களின் உதவியினால் டிஜிட்டலில் மாறிய ஓவியங்களையும் கண்டு ரசிக்கலாம்.

மெட்ரோபாலிடன் மியூசியம் ஆப் ஆர்ட் / அமெரிக்கா(நியூயார்க்) 

1870 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தஅருங்காட்சியகத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான கலைப்பொருட்களைகண்ணார கண்டு துள்ளிக் குதிக்கலாம். உலகின் மிகப் பண்டைய கால கலைப்பொருட்கள் 17 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் தொன்மை எகிப்து, நவீன ஓவியங்கள், ஆப்பிரிக்கா, ஆசியா,தொன்மை போர்க்கருவிகள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றைஇங்கு மகிழ்ச்சியாக கண்டு ரசித்து மகிழலாம். 1978 ஆம் ஆண்டிலிருந்து மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தின் எகிப்து கண்காட்சியிலுள்ள டெம்பிள் ஆஃப் டென்டர் கோயில் இந்த அருங்காட்சியகத்தின் ஸ்பெஷல் வசீகர வரலாற்றுச் சேமிப்பும் கூட!-ராஜிராதா, பெங்களூரு.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.