News
Loading...

சீசன் இல்லாத நாட்களில் ரயில் கட்டணம் குறையும்

சீசன் இல்லாத நாட்களில் ரயில் கட்டணம் குறையும்

புதுடில்லி: கூட்டம் இல்லாத நாட்களில், சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது.

கூட்டம் குறைவு:

தீபாவளி, பொங்கல், ஹோலி போன்ற பண்டிகை நாட்களில், சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக, சிறப்புக் கட்டண, சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ மற்றும் பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, பண்டிகைக் காலம் முடிந்து விட்டதால், ரயில்களில் செல்லும் பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது. 

நஷ்டம் ஏற்படுவதை தடுக்க...

இந்நிலையில், சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ மற்றும் பிரீமியம் ரயில்கள், போதிய பயணிகள் இன்றி இயக்கப்படுவதால், ரயில்வேக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் உள்ள படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் நிரம்பும் அளவுக்கு, கட்டணத்தை குறைத்து, பயணிகளின் வருகையை அதிகரிக்க, அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...