News
Loading...

சிறப்பு பதிவு : இன்றைய அதிர்ச்சி - நாளைய மகிழ்ச்சி

இன்றைய அதிர்ச்சி - நாளைய மகிழ்ச்சி

1969 - பதினான்கு வங்கிகள் நாட்டுடைமை;

1991 - 92 - உலகமய மாக்கல், தாராளமயமாக்கல்.

இவற்றைத் தொடர்ந்து தற் போது 2016 நவம்பர் 8.

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட அறிவிப்பு.

இந்தியப் பொருளாதாரம், இன்னொரு புதிய அத்தியாயம் கண்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம், பண சுழற்சியின் மீது சட்டப்படியான தனது அதிகாரத்தை அரசு உறுதி செய்து இருக்கிறது.

சற்றே நின்று நிதானித்து மூச்சு விடக் கூட அவகாசம் தராமல் திடுதிப்பென்று இவ்வாறு அறிவித் தல் நியாயமா..? ஒரு வகையில் இது கூடாதுதான். ஆனால், ‘பட் ஜெட்’ தயாரிப்பு முதல், பொருளா தாரப் புலனாய்வு, சோதனைகள் வரை, பொருளாதார அதிரடி நட வடிக்கை எதுவுமே, ரகசியம், வேகம் ஆகிய இரண்டு இணைக் கோடுகளின் மீதுதான் இயங்கு கின்றன.

இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து ‘வரு மானம் தெரிவிக்கும் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது.

கணக்கில் காட்டப்படாத வருமானம் (கருப்புப் பணம்தான்; வேறு என்ன..?) வைத்து இருப்போர், அதனை முறைப்படி வருமான வரித் துறைக்குத் தெரிவிக்கலாம்; இந்த வருமானத்தில் 45% வரி, கூடுதல் வரி, அபராதம் செலுத்தி, ‘நிம்மதியாக’ இருக்க வழி வகுத்தது இந்தத் திட்டம். (65,000 கோடி ரூபாய் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.)

செப்டம்பர் 30 வரை நான்கு மாதங்கள் இந்தத் திட்டம் நடைமுறையில் இருந்தது. திட்டம் நிறைவுக் கட்டத்தை நெருங்க நெருங்க, பிரதமர், நிதி அமைச்சர் தொடங்கி, அரசு வட்டாரங்கள் மொத்தமும், தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன(ர்). இதுவே இறுதி வாய்ப்பு; பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லப்பட்டது.

திட்டத்தின் கீழ் தெரிவிக்கும் வருமானத்துக்கான வரித் தொகையை, அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 வரை, நான்கு தவணைகளில் செலுத்தலாம் என்று ‘எளிய தவணை முறை' அறிவித்தது.

செப்டம்பர் 30க்குப் பிறகு, மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 45% வரி செலுத்துவது வீண்; இதை விடவும் குறைவான வரித் தொகை செலுத்தி தப்பித்துக் கொண்டு விடலாம் என்று சிலர் (பலர்?) தப்புக் கணக்கு போட்டனர்.

சரியாக 40 நாட்கள் கழித்து இப்போது புலி பாய்ந்து விட்டது.

இதற்கு முன்பு 1978-ம் ஆண்டு வாக்கில் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் (எச்.எம். படேல் - நிதி அமைச்சர்) பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.

யாருடைய பணமும் சட்ட விரோதம் என்று அறிவிக்கப் படவில்லை; மாறாக வேறு ஒரு ‘கரன்சி'க்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்போது கையில் வைத்து உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதே பண மதிப்பைக் கொண்டவைதாம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

கணக்கில் காட்டப்படாத வரு மானத்தை மிகப் பெரிய தொகை யாக, ரொக்கமாக வைத்து இருப்பவர்களின் கதி...?

தம்மிடம் உள்ள பணம் முழுவதையும் வங்கியில் செலுத்தலாம். அவர்கள் பெயரில் அவர்களது வங்கிக் கணக்கிலேயே சேர்த்து விடலாம். ஒரு பிரச்சினையும் இல்லை. வங்கியில் பணம் செலுத்தப் பட்ட அந்தக் கணமே, அப்பணம் முழுவதும் கணக்கில் வந்து விடுகிறது. இனியும் அது ‘கருப்பு' பணம் அல்ல. பிறகு என்ன...? செலுத்தி விடலாமே...!

வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் தொகைகள், வருமான வரித் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் பார்வைக்குள் வந்து விடும். கணக்கில் காட்டப்படாத ‘விடுபட்ட' பணம் என்பது எளிதில் தெரிந்து விடும். இதன் மீதான வரி, கூடுதல் வரி, அபராதம் மட்டுமல்ல; சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கைகளும் (prosecution proceedings) பாயும்.

வங்கியில் செலுத்த மனம் வராதவர்கள், ஒன்றும் செய்வதற்கு இல்லை. வேடிக்கை பார்க்கலாம்; பெருமூச்சு விடலாம். தனக்குத் தெரிந்தவர்கள் வழியாக, வங்கியில் செலுத்தி, வரி விதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள இயலுமா...? இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. யார் மூலம் வந்தாலுமே, அந்த பணம் கணக்கு வரம்புக்குள் வந்து விடுகிறது. மேலும், அந்தப் பணத்தை செலுத்தியவர், அந்தத் தொகைக்கான விளக்கத்தை அளிக்கக் கடமைப்பட்டவராகிறார். எப்படியும், சட்டபூர்வ சுழற்சிக்குள் அந்தப் பணம் வந்து விடுகிறது. அறிவிப்பின் நோக்கம் நிறைவேறி விடுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.