News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

பெங்களூருவில் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் தங்க நகைகள் விற்பனை: செய்தி
ஏ.டி.எம் மெஷின்ல வர்ற பணத்துல கள்ளநோட்டு கலந்து வர்ற மாதிரி, ஏ.டி.எம் நகையில கவரிங் நகை கலக்காம இருந்தா சரி!

உளுந்தூர்பேட்டைக்கு பணத்துடன் வந்த 3 கன்டெய்னர் லாரிகள்: செய்தி
மதுரையிலருந்து எனக்கு மாமனாரு அனுப்புன தீபாவளி சீரா இருக்கும் போல... ரூட்டு தெரியாம அங்க போயிட்டானுக!

தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்: உலக வங்கி
சத்தமா சொல்லாதீங்கய்யா... நம்பர் 1 இடத்துக்குக் கொண்டுட்டு வர்றேன்னு இன்னும் இருவது முப்பது அணு உலைய தொறந்து வுட்ற போறாய்ங்க!

தீபாவளி மது விற்பனை ரூ.250 கோடி: செய்தி
பாட்டில் வெலைக்கு மேல அஞ்சு ரூவா சேர்த்து வச்சி வாங்குனதையும் கணக்குல கூட்டுங்க ஆபீசர்... இன்னும் பல கோடி வரும்!

போதகர் வீட்டில் 70 பவுன் நகை  திருடிய அவரது மகனை போலீஸ் கைது செய்தது: செய்தி
சாத்தானை வீட்டுக்குள்ளயே வச்சிட்டு ஊருக்குள்ள தேடிருக்காப்டி!

முதல்வர் நலமாக வேண்டி 108 தேங்காய் உடைத்தார் நத்தம்
அங்கங்க ஐயாயிரம், பத்தாயிரம்னு பால் குடம் எடுக்குறாய்ங்க. இப்பதான் இவரு 108 தேங்கா வச்சி சட்னி ஆட்டிட்டு இருக்காரு!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.